×

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கினை தளர்த்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஊரடங்கினை தளர்த்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆஸியில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கின் போது சமூக விலகல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், செயலி பயன்பாடு போன்றவை அந்நாட்டில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கினை தளர்த்த வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் விக்டோரியா பார்லி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : protest ,Australia , Australia, curfew, civilians, struggle
× RELATED ஆண்டிப்பட்டியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு