×

கொரோனா வைரஸ்(COVID-19) உருவாக தொடங்கிய சீனாவின் வூகான் நகரில் 37 நாட்களுக்கு பிறகு இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா

வூகான்: சீனாவில் வூகான் நகரில் உருவான கொரோனா தொற்று ஏப்ரல் 3ஆம் தேதிக்குப் பிறகு,  இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன் முதலாக கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட இந்த நகரில் மொத்தம் 50,334 பேருக்கு தொற்று பரவி அனைவரும் குணமடைந்து விட்டதாக சீன அரசு தெரிவித்திருந்தது.

சீனாவில் வுகான்  நகரில் உருவான கொரோனா தொற்று உலகம் காட்டுத் தீயாய் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் இதுவரை 40 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிலோர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் சீனாவில் 76 நாள் நீண்ட ஊரங்கிற்குப் பிறகு கடந்த மாதம் 8 ஆம் தேதி வுகான் நகரில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு எல்லைகள் திறக்கப்பட்டன.இந்த நிலையில் ஊகானில் மீண்டும் கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட நபரின் மனைவி மற்றும் இதர 5 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Wuhan ,newcomer ,China ,COVID-19 ,Coroner , Corona, China, Wukan City, Corona
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...