×

அழியும் உலகத்தின் நுரையீரல் :கொரொனா சமயத்தை பயன்படுத்தி அமேசானில் வேகமெடுத்துள்ள காடு அழிப்பு!!

பிரேசில் : கொரொனா சமயத்தை பயன்படுத்தி அமேசானில் காடு அழிப்பு வேகமாக நடைபெறுவதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா பரவலால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி அமேசான் காடுகளை அழிக்கும் பணிகளைப் பிரேசில் தீவிரப்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் ஒன்பது நாடுகளில் பரவியிருந்தாலும், இதன் பெரும் பகுதி பிரேசில் நாட்டிலேயே அமைந்துள்ளது. இந்தக் காடுகளை வியாபார நோக்கங்களுக்காக ஜெய்ர் போல்சனாரோ தலைமையிலான பிரேசில் அரசு அதிகளவில் அழித்து வருகிறது. அந்நாட்டின் இந்தச் செயலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில், தற்போது இருக்கும் சூழலைப் பயன்படுத்தி காடுகள் அழிப்பு வேகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 64% காடழிப்பு அரேங்கேறியுள்ளதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதாவது கடந்த வருடம் ஏப்ரலில் 248 சதுர கிமீ அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டன.இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் சட்டவிரோதமாக காடழிப்பு 55% அதிகரித்துள்ளதாகவும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 1202 சதுர கிமீ அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுக்கிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. மனிதர்களால் ஏற்படும் காடழிப்பு என்பது வனம் அழிவு மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த பூமிக்குமே பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Amazon ,Deforestation , Corona, Amazon, Speed, Forest, Destroy
× RELATED புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் 7-வது முறையாக விண்வெளி பயணம்..!!