×

குஜராத்தின் கிர் வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களில் 23 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணம்!!!

ஜூனாகத்: குஜராத்தின் கிர் வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களில் 23 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளன. இதற்கு மலேரியா போன்ற நோயை உருவாக்கும் வைரஸ் தாக்குதலும் ஒரு காரணம் என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள். குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தின் கிர் வனப்பகுதியில் ஆசிய சிங்கங்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. இந்தியாவில் சிங்கங்கள் வாழும் ஒரே வனப்பகுதி கிர்தான். கிர் வனப்பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வழக்கமாக சிங்கங்களிடையே சண்டை, முதுமை போன்ற காரணங்கள் முதன்மையாக சொல்லப்பட்டன. ஆனால் சிங்கங்களை கொல்லும் கொடிய கெனைன் டிஸ்டெம்பர் என்கிற வைரஸ்தான் சிங்கங்களை தாக்கியது தெரியவந்தது. இதற்கான தடுப்பூசிகள் போடப்ப்ட்டு சிங்கங்கள் காப்பாற்றப்பட்டன. தற்போதும் மாநிலத்தின் கிர் காடுகளில் 3 மாதங்களில் 23 சிங்கங்கள் அடுத்தடுத்து இறந்தது. தற்போது இதற்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கிர் வனப் பகுதியில் சிங்கங்கள் மரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மலேரியா போன்றவற்றை உருவாக்கும் வைரஸ் தாக்குதல்தான் இதற்கு காரணம் என காரணம் கூறப்படுகிறது.

Tags : Gujarat ,Gir forest , Gujarat, Gir wilderness, 23, lions, succession, death
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...