×

விலை வீழ்ச்சியால் வீதியில் கொட்டப்படும் தக்காளி

நெல்லை:  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தக்காளிப்பழம் விலை வீழ்ச்சியால் வீதியில் கொட்டப்படுகின்றன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் இதன் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. விவசாயிகளிடம் ஒரு கிலோ தக்காளி ரூ.8 என்ற விலையில் சில இடங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.

நெல்லையில் விற்பனை விலை ஒரு கிலோ ரூ.16 முதல் ரூ.18 என உள்ளது. விலை தொடர்ந்து குறைவாக இருக்கும் நிலையில் விளைச்சல் அதிகமாகியுள்ளதால் கோடை வெயில் கொளுத்துவதால் விற்காத தக்காளிப்பழத்தை கூடுதலாக ஓரிருநாள் சேமித்து வைத்து விற்கமுடியாத அளவிற்கு வேகமாக பழுத்து அழுகுகிறது.  இதனால் கெட்டுப்போன தக்ககாளி பழங்கள் சந்தைகள் அருகிலேயே வீசி எறியப்படுகின்றன. இவை கால்நடைகளுக்கு தீவனமாக மாறி வருகிறது. அவையும் குறைந்த அளவிலேயே திண்று செல்வதால் மீதி கிடக்கும் அழுகிய தக்காளிப்பழங்கள் துர்வாடை வீசுகின்றன.

Tags : street , Tomatoes poured , street due, falling prices
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்