×

வாட்டி வதைக்கும் வெயிலும்.. குளிர செய்யும் கோடைமழையும்... தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ?

சென்னை: தென்காசி, குமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய,கனமழை பெய்யும் வானிலை ஆய்வு  மையம் தகவல் அளித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை,ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி,நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய,லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்காசி, குமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய,கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இதர மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். குமரிக்கடல்,லட்சத்தீவு மற்றும் மாலத்தீவையொட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி,வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியிலும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத்  தவிர்க்க வேண்டும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஷியஸும் ஒட்டி இருக்கும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் பேச்சிபாறையில் 4 செ.மீ. மழை பொழிந்துள்ளது. தக்கலை, சித்தார், குழித்துறை ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

Tags : districts ,Tamil Nadu , Madurai, Trichy, 5, Districts, Vail, Meteorological Center
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...