×

கொரோனாவுக்கான முழுமையான உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டம் : பாரத் பயோடெக் நிறுவனத்துடன் கைக்கோர்த்து

மும்பை : கொரோனாவுக்கான முழுமையான உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முனைப்பில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இதுகுறித்த ஆராய்ச்சிகளும் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. கொரோனாவுக்கு 2,109 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்குகிறது. கொரோனா பரவலை கட்டுப்படாத பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சற்று பலனற்று போகவே, தடுப்பூசி கண்டுபிடிப்பது இன்றியமையாததாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கான முழுமையான உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது. புனேவின் ஐ.சி.எம்.ஆரின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (என்.ஐ.வி) தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ் விகாரத்தைப் பயன்படுத்தி இந்த தடுப்பூசி உருவாக்கப்படும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரிபு வெற்றிகரமாக என்.ஐ.வி யிலிருந்து பிபிஐஎல்-க்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இரு அமைப்புகளிடையே தடுப்பூசி மேம்பாட்டுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.வி தடுப்பூசி வளர்ச்சிக்கு பிபிஐஎல்-க்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்.ஐ.சி.எம்.ஆர் மற்றும் பிபிஐஎல் தடுப்பூசி மேம்பாடு, அடுத்தடுத்த விலங்கு ஆய்வுகள் மற்றும் தடுப்பூசியின் மருத்துவ மதிப்பீடு ஆகியவற்றை விரைவுபடுத்த விரைவான ஒப்புதல்களை நாடுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Bharat Biotech ,Indian ,Medical Research Council ,Partner ,Corona , Corona, Domestic, Vaccine, Indian Medical Research Council, Project, Bharat Biotech
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை