×

கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில் மக்கள் சிப்பாய்களை போல செயல்பட வேண்டும் : கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி பேட்டி

சென்னை :அடுத்த ஒரு வார காலத்துக்கு கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார். எந்த அறிகுறியும் இல்லாதவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொள்ளப்படும் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த பின் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார். மேலும் சென்னையில் மட்டும் பாதிப்பு உயர்ந்து வருவது குறித்து ராதா கிருஷ்ணன் பி[பேசியதாவது, வைரஸ் பாதித்தவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் எண்ணிக்கையை மட்டும் எடுத்து கொண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்னையில் தான் மிக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில் மக்கள் சிப்பாய்களை போல செயல்பட வேண்டும். தொண்டை, மூக்கு வழியாகவே கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. உள்ளாடைகள் அணிவதை போல முகக்கவசம் அணிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். பொது சுகாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும்.

கோயம்பேடு சந்தையில் பரவிய வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது. கொரோனா பாதித்தவர்கள் அச்சம் கொள்ளாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். சென்னையில் 33% மக்கள் முக கவசம் அணிவதே இல்லை. கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 2,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மரண தருவாயில் உள்ளவர்களை காப்பாற்றுவதே எங்களின் நோக்கம், என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : soldiers ,war ,Specialist ,Special Officer ,Corona Prevention ,Corona ,Radhakrishnan , Corona, Prevention, Mission, Special Officer, Interview, Radhakrishnan
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி