×

ஆந்திர மாநிலத்தில் மதுக்கடை எண்ணிக்கையை மேலும் 13% குறைக்க உத்தரவு

திருமலை: ஆந்திராவில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை 13% குறைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே 4 ஆயிரத்து 380 மதுக்கடைகள் இருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 20 சதவீதம் குறைத்து 3500 கடைகளாக குறைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மூடப் பட்டிருந்த மதுக்கடைகள் கடந்த 4ம் தேதி் மீண்டும் 75 சதவீத விலை உயர்வுடன் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதுக்கடைகளின் எண்ணிக்கையை மேலும் 13 சதவீதம் குறைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 3500 மதுக்கடைகள் 2934 மதுக்கடைகளாக குறைக்கப்படுகிறது. மேலும் பார்களின் எண்ணிக்கையும் 40 சதவீதம் குறைப்பதன் மூலம் 530 ஆக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மதுக்கடைகள்திறப்பு இன்று முதல் நேரம் 2 மணி குறைக்கப் படுகிறது. இதன் படி காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

Tags : Andhra Pradesh , Andhra Pradesh, Bar, Corona
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...