×

அய்யய்யோ... ஆத்துல தண்ணிய காணோம்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

புதுடெல்லி: செனாப் ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை இந்தியா குறைத்துவிட்டதாக பாகிஸ்தான் கூறுவது ஆதாரமற்றது என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. சிந்து நீர் ஆற்றை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்ள  சிந்து நீர் ஒப்பந்தம் கடந்த 1960ல் உடன்படிக்கையானது. இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக இரு நாடுகளும் தங்கள் தரப்பில் பிரதிநிதிகளை நியமித்துள்ளன. இதன்படி ரவி,  பியாஸ், சட்லெஜ் உள்ளிட்ட மூன்று ஆறுகள் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், சிந்து நீர் ஆணையத்தின் பாகிஸ்தான் ஆணையர் சையத் முகமது மெஹர் அலி ஷா இந்தியா தரப்பு ஆணையர் பிரதீப் குமார் சக்சேனாவுக்கு எழுதிய கடித‍த்தில், ‘‘செனாப் ஆற்றில் இருந்து மாரலா அணைக்கு விடப்படும் நீரின் அளவை இந்தியா குறைத்துவிட்டதாக தெரிகிறது. வினாடிக்கு 31,853 கன‍ அடியாக வந்து கொண்டிருந்த நீரின் அளவு தற்போது வினாடிக்கு 18,700 கன அடியாக குறைந்து விட்டது. எனவே இதனை பரிசோதித்து தெரியப்படுத்த வேண்டும்’’ என்று கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்து சக்சேனா கூறுகையில், ``பாகிஸ்தான் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் செனாப், ராவி ஆறுகளில் இருந்து அக்னூர் மற்றும் சிதரா மதகுகள் வழியாக இந்தியா அனுப்பும் நீரின் அளவில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான அளவு நீரே திறந்து விடப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.


Tags : attula tanniya ayyayyo ,India ,Pakistan , India, Pakistan
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை