×

தென்கொரியாவில் மீண்டும் கால்பந்து போட்டி தொடக்கம்

சியோல்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் விளையாட்டு உலகம் முடங்கியுள்ள நிலையில், உலகில் முதல் முறையாக தென் கொரியாவில் மீண்டும் கால்பந்து போட்டி தொடங்கியுள்ளது. ஊரடங்கு முடிந்ததும், மீண்டும் கால்பந்து போட்டியை தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் பணியில் அரசுகளுடன் இணைந்து கால்பந்து சங்கங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. இத்தாலி உட்பட சில  நாடுகளில் பயிற்சி செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எங்கேயும் இன்னும் போட்டி தொடங்கப்பட
வில்லை. இந்நிலையில் தென்கொரியாவில் முதல் முறையாக மீண்டும் கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. கே லீக் என்ற பெயரில் நடத்தப்படும் நாட்டின் முக்கிய கால்பந்து தொடரான இதில் மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. போட்டிகள் தொடங்கப்பட்டாலும் கொரோனா பீதி தொடருவதால்  ரசிகர்கள் யாரையும் அனுமதிக்காமல் மூடிய அரங்கிற்குள் போட்டிகள் நடத்தப்படுகிறது.

பங்கேற்கும் 12 அணிகளின் வீரர்கள் பயிற்சியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என 1,100 பேருக்கு கோவிட்-19 சோதனை செய்யப்பட்டது. மேலும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒளிபரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களும் மாஸ்க், கையுறை அணிவது கட்டாயம். வீரர்கள் கட்டியணைப்பது, கைகுலுக்குவது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் கால்பந்து போட்டிகள் தொடங்கியிருப்பது குறித்து இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் செட்ரி, ’தென் கொரியாவில் மீண்டும் கால்பந்து தொடங்கியிருப்பது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.
பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் (குரோஷியா), ’கால்பந்து போட்டி  தொடங்கியிருப்பது ஆசியாவில் உத்வேகத்தை அளித்துள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகளில் சூழ்நிலை  எப்படி என்பதை பொறுமையுடன் கவனிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.


Tags : start ,South Korea ,football match , South Korea, Football Tournament
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...