×

வெளிமாநில தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வெளிமாநில தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்று அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் செல்லும் தொழிலாளர்களோ, அவர்களின் சொந்த மாநிலமோ அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. தொழிலாளர்களோ, வெளிமாநிலமோ அதற்கான செலவை ஏற்கவில்லை என்றால் தமிழக அரசே அதற்கான செலவை ஏற்கும்.

தமிழக அரசு சொந்த செலவில் வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும்.தங்களில் வீடுகளில் தனிமைப்படுத்த வசதியில்லாத ஏழை தொழிலாளர்கள் மற்றும் ஹாட்ஸ்பாட் எனக்கூறப்படும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு திரும்பும் அதிக ஆபத்து உள்ளவர்கள் கட்டாயம் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் அறிகுறி உள்ளவர்கள் 14 நாட்கள் இங்கேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் இரண்டு முறை நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Govt ,State , Foreign Workers, Government of Tamil Nadu
× RELATED பணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும்...