×

கொரோனா பாதித்திருந்தாலும் தாய்ப்பாலால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

நியூயார்க்: கொரோனா பாதித்த தாயின் தாய்ப்பாலானது, குழந்தையை வைரசில் இருந்து பாதுகாக்கும் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளையும் புரட்டிப்போட்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு நாடும் கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சை முறைகள்,  தடுப்பு மருந்து, தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வெவ்வேறு வகையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நியூயார்க்கின் மவுன்ட் சினாயில் உள்ள இகான் ஸ்கூல் ஆப் மெடிசன் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழுவானது கொரோனா பாதித்த தாய்மார்களின் தாய்பாலில் வைரசை எதிர்க்கும் எதிர்ப்பு சக்திகள் உள்ளதாகவும், அவை குழந்தைகளை பாதுகாக்கும் என்றும் ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர் குழு கூறுகையில், “கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்களது உடல்நிலை சரியாகும் வரை தொடர்ந்து குழந்தைகளுக்கு பாலூட்டலாம். இதனால் அச்சம் கொள்ள தேவையில்லை. காரணம் தாய்ப்பால் மூலமாக கொரோனா நோய்தொற்று பரவாது. மேலும், தாய்ப்பாலில் கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்திகள் அதிகளவில் உள்ளதை தற்போது கண்டறிந்துள்ளோம். இவை நோய் தொற்றில் இருந்து குழந்தையை பாதுகாக்கும்” என்றனர்.

Tags : infant ,Researchers , Corona, breastfeeding, baby, researchers
× RELATED ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் பிறந்த...