காஸ்டியூம் டிசைனராக மாறிய நடிகை

காஸ்டியூம் டிசைனராக மாறியுள்ளார் நடிகை அம்ரிதா அய்யர். விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்தவர் அம்ரிதா அய்யர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது லிப்ட் படத்தில் கவின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஊரடங்குக்கு முன்பாக நடந்தது. அப்போது படத்தில் காஸ்டியூம் டிசைனராக அம்ரிதா பணியாற்றியுள்ளார். அவர் படத்தில் இடம்பெறும் தனது காஸ்டியூம்களை தானே தேர்வு செய்தும் அதை தயாரித்தும் பயன்படுத்தியுள்ளார்.

உடைகளை அவர் தேர்வு செய்யும் படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ‘’எனது படத்துக்கு நானே காஸ்டியூம் டிசைனராக பணியாற்றுகிறேன். எனக்கான உடைகளை நானே தேர்வு செய்தேன். புதிய வேலை பிடித்திருக்கிறது’’ என அம்ரிதா கூறியுள்ளார்.

Related Stories: