×

ஆந்திராவில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பயனாளிகளின் வீடு தேடி ரேஷன் அரிசி விநியோகம்

திருமலை: ஆந்திரா, குண்டூர், தாடேபல்லியில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் உணவுத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: ரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய அரிசி தரமானதாக இல்லாததால் பொதுமக்கள் அதனை பெற்று பயன்படுத்தாமல் இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். எனவே அவ்வாறு இல்லாமல் அரசு சார்பில் வழங்கக் கூடிய அரிசி தரமானதாக இருப்பதோடு பொதுமக்களும் அரசு வழங்கும் அரிசியை சமைத்து சாப்பிடும் விதமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப தரத்துடன் கூடிய அரிசியை பொதுமக்களின் வீடு தேடி வழங்கப்படும் என்று எனது பாதை யாத்திரையின்போது தெரிவித்தேன்.

அதன்படி  செப்டம்பர் 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும்  தரமான அரிசியை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து உணவுத்துறை செயலாளர்  சசிதர் பேசுகையில், ஒரு மாதத்திற்கு 2.3 டன் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட உள்ளது. இதற்காக 13,370 வாகனங்கள் மூலம் சிவில் சப்ளை கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகள் சீல் வைக்கப்பட்டு ஒவ்வொரு மூட்டைக்கும் பார்கோட் வழங்கப்பட உள்ளது.  கிராம, வார்டு தன்னார்வலர்கள் மூலம் வாகனத்தில் தரமான அரிசி கொண்டு செல்லப்பட்டு பயனாளிகளின் வீட்டிற்கு சென்று அவர்களது கண்முன்னே எடை போட்டு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : beneficiary house ,Andhra Pradesh , Andhravi, ration rice, distribution
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...