×

சொந்த ஊருக்கு செல்ல முயன்ற ஆந்திர மாநில இளைஞர்களுக்கு அனுமதி மறுத்து அலைக்கழிப்பு: 5 நாட்களாக நடந்தே சுற்றும் அவலம்

வேப்பனஹள்ளி: கெலமங்கலத்திலிருந்து சொந்த ஊரான ஆந்திர மாநிலத்திற்கு செல்ல முயன்ற கூலி  தொழிலாளர்களை, அம்மாநில போலீசார் அனுமதிக்காததால் மீண்டும் கெலமங்கலத்திற்கே  திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோல்  மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில்  தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர். கொரோனா ஊரடங்கால், வேலையிழந்த அவர்கள், தங்களது சொந்த கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தனர்.  வாகன போக்குவரத்து இல்லாததால் கெலமங்கலத்திலிருந்து நடந்தே ஊருக்கு  புறப்பட்டனர். ஆனால், வேப்பனஹள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள  சோதனைச்சாவடியில், அவர்களை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தமிழகத்தில்  கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், அங்கிருந்து வருவோரை ஆந்திர  மாநிலத்திற்குள் அனுமதிக்க முடியாது என கூறினர். மேலும், ஒப்பந்ததாரரை  தொடர்பு கெர்ணடு அழைத்துச்செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், அவரால்  நேரில் வர முடியாததால் தொழிலாளர்களை சூளகிரிக்கு திரும்பி வருமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, அனைவரும் மீண்டும் சூளகிரியை நோக்கி நடந்தே  சென்றனர். எந்த பக்கம் சென்றாலும் தடுப்பு ஏற்படுத்தி அடைத்துள்ளதால், கடந்த  5 நாட்களாக வேப்பனஹள்ளி பகுதியை சுற்றி சுற்றி வந்தது பார்க்க  பரிதாபமாக இருந்தது.


Tags : Andhra Pradesh ,hometown ,home , Andhra Pradesh, youth , permission, travel home
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி