×

முதலிடத்தில் தூங்கா நகரம்: தமிழகத்தில் இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.294 கோடிக்கு மதுபானம் விற்பனை...டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.122 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு இடையே, டாஸ்மாக் கடை நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டன. சென்னை மாநகர காவல்  எல்லைக்குட்பட்ட பகுதி, கட்டுபடுத்தப்பட்ட பகுதியை தவிர்த்து மாநிலம் முழுவதும் 5,300 கடைகளில் 3,700 கடைகள் திறக்கப்பட்டது. முதல்நாளான நேற்று டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலை மோதியது. டாஸ்மாக் கடைகளில்  பல கி.மீ தூரம் வரிசையில் நின்று மது வகைகளை குடிமகன்கள் வாங்கி சென்றனர்.  இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.

பலரும் போட்டிபோட்டு மதுவகைகளை அள்ளிச் சென்றனர். முதல்நாள் போன்று இரண்டாவது நாளில் பெரும்பாலான கடைகளில் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றப்படவில்லை. பல கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால்  போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். முதல்நாளை காட்டிலும் இரண்டாவது நாள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  இதற்கிடையே தமிழகத்தில் இரண்டாவது நாளான நேற்று ரூ.122 கோடிக்கு மது  விற்பனையாகியுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.32.45 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியள்ளது. திருச்சி மண்டத்தில் ரூ.31.17 கோடிக்கும், சேலம் மண்டத்தில் ரூ.29.09 கோடிக்கு, கோவை மண்டலத்தில் 20.01  கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.9.28 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

முதல் நாளான நேற்று முன்தினம் ரூ.172.59 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் ரூ.10.16 கோடி (காஞ்சிபுரம் 6.75 கோடி, திருவள்ளூர் 3.31 கோடி) திருச்சி மண்டலத்தில் ரூ.45.67 கோடி, மதுரையில் ரூ.46.78  கோடி, சேலத்தில் ரூ.41.56 கோடி, கோவையில் ரூ.28.42 கோடி மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பீர் வகைகள் 45,061 பெட்டிகள், மதுவகைகள் 2 லட்சத்து 14 ஆயிரத்து 980 பெட்டிகள் விற்பனையாகியுள்ளது. 2வது நாளாக நேற்று,  ஒரே நாளில் ரூ.122 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.294 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், டாஸ்மாக் கடைகளை திறக்க மக்கள் நீதிமய்யம் கட்சி உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் மே17-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆன்லைனில் மதுபானங்கள்  விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்றும் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம்  அறிவித்துள்ளது.


Tags : Topanga City ,Breweries ,Tamil Nadu , Drinking tops for $ 294 crore in two days in Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...