×

வீட்டுக்கடன் வட்டியை உயர்த்தியது எஸ்பிஐ

மும்பை: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வீட்டுக்கடன்களுக்கான வட்டியை 0.3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ரெப்போ வட்டி அடிப்படையிலான கடன்களுக்கு வட்டி விகிதத்தை 0.3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது கடந்த 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 75 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு வட்டி 0.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 30 லட்சம் வரையிலான கடன்களுக்கு 7.2 சதவீதமாக இருந்த வட்டி, 7.4 சதவீதமாகவும், 30 லட்சத்துக்கு மேல் ₹75 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு வட்டி 7.45 சதவீதத்தில் இருந்து 7.65 சதவீதமாகவும், 75 லட்சத்துக்கு  மேல் 7.55 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 மேக்ஸ்கெயின் வீட்டுக்கடன் பிரிவில், 30 லட்சம் வரையிலான கடன்களுக்கு வட்டி 7.45 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல், சொத்து அடமான கடன்களுக்கு வட்டி 0.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன்படி 1 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டி 8.9 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாகவும், 1 கோடிக்கு மேல் ₹2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டி 9.4 சதவீதத்தில் இருந்து 9.7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 45 நிமிடத்தில் கடன்: அவசர தேவைக்காக, 5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 45 நிமிடங்களில் அனுமதி அளிக்கப்படும் என இந்த வங்கி தெரிவித்துள்ளது. இந்த கடன்களுக்கு வட்டி 10.5 சதவீதமாக இருக்கும் எனவும், இஎம்ஐ 6 மாதங்களுக்கு பிறகு தொடங்கும் எனவும் யோனோ ஆப்சில் இந்த வங்கி குறிப்பிட்டுள்ளது.



Tags : SBI , SBI,home loan interest
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...