×

சரக்கு ரயில் மோதி உயிரிழந்த 16 பேர் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்

சென்னை: சரக்கு ரயில் மோதி உயிரிழந்த 16 பேர் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகே ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் நேற்று அதிகாலை அவ்வழியே சென்ற சரக்கு ரயில் மோதியதில், சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். ராமதாஸ் இரங்கல்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அவுரங்காபாத் அருகே சரக்கு ரயில் மோதி வெளிமாநில தொழிலாளர்கள் 16 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது’ என கூறியுள்ளார்.



Tags : Edappadi ,death ,train accident ,families ,deaths , Freight train collision, 16 people lost their lives, families, CM Edappadi, mourned
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்