×

வாங்கண்ணா... வணக்கம்ண்ணா... சீனாவில் இருந்து வெளியேறும்நிறுவனங்களுக்கு இந்தியா வரவேற்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாகவும், சீனாவின் ஏமாற்றுத்தனத்தாலும் கொந்தளிப்பு அடைந்துள்ள பல்வேறு உலக நிறுவனங்கள் அங்கிருந்து வெளியே முடிவு செய்துள்ளன. இவற்றை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா முயற்சி செய்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில்தான் கொரோனா முதலில் பாதித்தது. ஆனால், அதை வெளியே சொல்லாமல் சீனா மறைத்துவிட்டது. இதனால் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாடாய்பட்டு வருகின்றன. சீனா முன்கூட்டியே வைரஸ் பற்றி எச்சரித்திருந்தால், பல ஆயிரக்கணக்கான உயிர்கள் மடடுமின்றி, உலக பொருளாதாரமும் இந்த அளவுக்கு பாதிப்பை சந்தித்திருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், சீனாவின் இந்த வஞ்சத்தனத்தால் கொதிப்படைந்துள்ள பல உலக நிறுவனங்கள் அந்நாட்டில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான ஆசிய நாடுகளில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. இந்த வகையில், அதிகளவில் தொழிலாளர்கள் பலம், போதுமான அளவு போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் காரணமாக, இந்தியாவின் பக்கம் அந்நிறுவனங்களின் கவனம் திரும்பி உள்ளது. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.

இவற்றை வரவேற்க தயாராக இருக்கும்படி ஏற்கனவே மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதன்படி பல்வேறு மாநிலங்கள் குழுக்களை அமைத்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசும் இந்த நிறுவனங்களை தங்கள் பக்கம் இழுக்கவும், இந்தியாவில் இருந்து பொருட்களை அந்நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளவும் சீரிய முறையில் பேச்சுவார்தை நடத்தி வருகிறது.



Tags : Wankanna ,India ,China ,Companies ,vankanna veliyerumniruvanankal , Corona, China, Companies, India
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...