×

சென்னையில் இருந்து ஸ்கூட்டரில் கேரளா வந்த வாலிபருக்கு தனிமை முகாம்: சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி

திருவனந்தபுரம்: சென்னையில் இருந்து ஸ்கூட்டர் மூலம் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து கேரளா வந்த வாலிபரை அதிகாரிகள் அரசு முகாமில் தனிமைப்படுத்தினர். திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியைச்  சேர்ந்த மாணவர் சென்னையில் மரைன் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து  வருகிறார். திடீரென லாக்-டவுன் அறிவிக்கப்பட்டதால் அவரால் ஊருக்கு வர  முடியாமல் சென்னையில் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் வேறு வழியின்றி கடந்த இரு  தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து அந்த மாணவர் ஸ்கூட்டரில்  ஊருக்கு  புறப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்  காலை திருவனந்தபுரம் வட்டியூர்க்காவில் உள்ள  தனது வீட்டுக்கு அந்த மாணவர் வந்தடைந்தார்.  

ேகரளாவில் வீடுகளில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அந்தந்த இடங்களுக்கே ெசன்று அரசு  சார்பில் உணவு  வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாணவரின் வீட்டுக்கு அருகே ஒரு  குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு  கொடுக்க சென்றனர். அப்போது இந்த மாணவர்  தனக்கும் உணவு பொட்டலம்  வேண்டுமென கேட்டுள்ளார். விசாரித்த போதுதான் அவர்  சென்னையில் இருந்து  ஸ்கூட்டரில் ரகசியமாக வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அரசு முகாமில் தனிமைப்படுத்தியுள்ளனர்.


Tags : Health officials ,Solidarity camp ,Kerala ,Chennai ,camp , Chennai, Kerala, Volunteer, Solitude Camp, Health Department Officers
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...