×

முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 1000 அபராதம்: தெலங்கானா அரசு அதிரடி

திருமலை: தெலங்கானாவில் முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.தெலங்கானா மாநில அரசு  கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்தது. இதற்காக அரசாணை எண் 64ஐ மாநில அரசு வெளியிட்டுள்ளது. பேரிடர் பேரழிவு மேலாண்மை சட்டம் 2005 படி இந்த உத்தரவை அளித்துள்ளது.  அதன்படி, தெலங்கானாவில் இருந்து சர்வதேச பயணங்களை ரத்து செய்தல், பல்வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் கூலித் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கான சிறப்பு ரயில்களை தவிர மாநிலத்தில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து,  மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்ட பயணங்களுக்கு தடை விதித்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்துள்ளதாகவும்,  அனைத்து வகையான கல்வி நிறுவனங்கள், பயிற்சி மற்றும் பயிற்சி மையங்களும்  மூட உத்தரவிட்டுள்ளது. மக்கள் பெரும்பாலும் கூடும் அரசியல் மற்றும் மத வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு  7 மணி முதல் காலை 7 மணி வரை கட்டாயம் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் ₹1000 அபராதம் விதிக்கப்படும். ஆரஞ்சு மற்றும் பசுமை மண்டலத்தில்  இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


Tags : Telangana ,Telangana Government Action , Face-to-face, 1000 fine, corona, curfew, Telangana government
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!