×

தமிழகம் முழுவதும் 24 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா

சென்னை: தமிழகம் முழுவதும் 24 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையேயும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த பகுதிகளில் வைரஸ் கிருமிகளை அழிக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை எண்ணூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி உட்பட 8 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றி வரும் 14 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று வேப்பேரி தீயணைப்பு நிலையத்தில் உள்ள 4 வீரர்களுக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து வேப்பேரி தீயணைப்பு நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதித்த தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. அதேபோல்,  கோவை, திருச்சி என மாநிலம் முழுவதும் 6 தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர். இதையடுத்து தீயணைப்பு துறையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,firefighters ,Tamil Nadu , Tamil Nadu, 24 Firefighters, Corona
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...