×

பண்ணையில் அடைக்கலம் கொடுத்திருந்த 31 பேரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் பிரகாஷ்ராஜ்

தெலங்கானாவில் கொரோனா அச்சுறுத்தல் குறையத்தொடங்கி போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பதால், தனது பண்ணையில் தங்கியிருப்பவர்களின் சொந்த ஊர் பயணத்துக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினார் நடிகர் பிரகாஷ்ராஜ். தேசிய ஊரடங்கு தொடங்கியது முதல் எனது பண்ணையில் இருந்த 31 குடிமகன்களின் பாதுகாப்பான பயணத்துக்கு அதிகாரிகளிடம் பேசினேன். அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததில் மகிழ்ச்சி. இன்னும் முடிந்துவிடவில்லை. போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. தேவைகள் உள்ளவர்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்வேன். மனிதத்தை கொண்டாடுவோம். வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம் என்று சொன்ன பிரகாஷ்ராஜ், அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று தெலங்கானா அரசு பயணத்துக்கு உதவி செய்துள்ளது.

இதுகுறித்து தன்னுடன் பண்ணை வீட்டில் தங்கியிருந்தவர்கள் வண்டியில் ஏறும் போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரகாஷ்ராஜ் கூறுகையில், பாதுகாப்பான பயணத்துக்கு அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் தெலங்கானா காவல்துறைக்கு நன்றி. 44 நாட்கள் எனது  பண்ணையை பகிர்ந்து அவர்களுக்கு இடம் அளித்தேன். நான் அவர்களை கண்டிப்பாக மிஸ் செய்வேன். அவர்களின் வாழ்க்கையில் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். நான் அவர்களை கைவிட்டு விடவில்லை என்பதை நினைத்து ஒரு சக குடிமகனாக பெருமை கொள்கிறேன். அவர்களுக்கு நம்பிக்கையூட்டி கொண்டாடினேன். மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

Tags : traders ,hometown ,Prakashraj , Farm, Prakashraj
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு