×

கொரோனா நோயாளிகளுக்கு ஃபேவிபிராவிர் என்ற மருந்தை வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாளர் அனுமதி

டெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு ஃபேவிபிராவிர் (Favipiravir) என்ற மருந்தை மருத்துவமனைகளில் கொடுத்து பரிசோதிக்கலாம் என இந்திய தலைமை மருந்து கட்டுப்பாளர் அனுமதி அளித்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இவ்வாறான சூழ்நிலையில், கொரோனாவுக்கு ஒவ்வொருவரும் ஒரு வழிமுறையை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு ஃபேவிபிராவிர் (Favipiravir) என்ற மருந்தை மருத்துவமனைகளில் கொடுத்து பரிசோதிக்கலாம் என இந்திய தலைமை மருந்து கட்டுப்பாளர் அனுமதி அளித்துள்ளார்.மூலிகை தாவரத்தில் இருந்து பெறப்படும் சத்துக்களை வைத்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இன்புளூவன்சாவுக்கு இந்த மருந்து நல்ல பலனை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு அதை வழங்கலாம் என்ற அனுமதி கிடைத்துள்ளதாக மத்திய அறிவியல் தொழில்துறை ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சேகர் மண்டே தெரிவித்துள்ளார். 


Tags : Indian , Corona, Patients, Favipravir, Drug, Indian Chief Drug Controller, Permission
× RELATED இந்திய எல்லையில் பதற்றம்...! 200 முதல் 300...