×

விலை உயர்வால் அதிர்ச்சி; மதுப்பிரியர்கள் வாக்குவாதம்: கிருஷ்ணகிரியில் களேபரம்

கிருஷ்ணகிரி:  மதுபானங்கள் விலை உயர்வால் அதிர்ச்சிக்குள்ளான மதுப்பிரியர்கள், கிருஷ்ணகிரியில் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த 4ம் தேதி முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. மேலும், டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் அனுமதி அளித்தது. இதனையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 119 டாஸ்மாக் கடைகளின் முன்பு, நேற்று முன்தினம் தடுப்பு கட்டைகள் அமைத்தனர். நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளில் விற்பனை தொடங்கியது. ஆனால், கிருஷ்ணகிரியில் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் கூடவில்லை. ஒவ்வொரு கடை முன்பும் 100 பேர் அளவிற்கே கூட்டம் இருந்தது.

 முகக்கவசம் அணிந்து ஆதார் அட்டையுடன் வந்தவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். அரசு அறிவித்தது போல் இல்லாமல், வயது வித்தியாசமின்றி வரிசையில் வந்த அனைவருக்கும் மது விற்பனை செய்யப்பட்டது. மேலும், கேட்ட சரக்கு இன்றி கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பாட்டில்கள் மட்டுமே விற்கப்பட்டது. தமிழக அரசு மது விலையை உயர்த்தியுள்ளதால், எம்ஆர்பி விலையை விட குவார்ட்டருக்கு ₹20 என ஒரு புல் பாட்டிலுக்கு ₹80 கூடுதலாக விற்றதால் சிலர் டாஸ்மாக் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில டாஸ்மாக் ஊழியர்கள் 2 குவார்ட்டர் வாங்கியவர்களிடம் கூடுதலாக ₹10 வீதம் வசூலித்ததால், மதுப்பிரியர்கள் புலம்பியபடி சென்றனர்.  



Tags : Liquorists ,Krishnagiri ,Price rise , Shock ,price,Liquorists, Krishnagiri Chaos
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்