×

வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் பயங்கர தீ பொருட்கள் எரிந்து சாம்பல்

வெள்ளகோவில்:  வெள்ளகோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் நேற்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில்  நூல், இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் பொருட்கள் எரிந்து சேதமானது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் பொன்கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கதிரேசன், சிவநாதபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர்களுக்கு சொந்தமான விசாகா நூற்பாலை வெள்ளகோவில் முத்தூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓபன் எண்ட் முறையில் நூல் தாயாரிக்கப்பட்டு வருகிறது.  100க்கும் மேற்பட்வர்கள் இங்கு பணிபுரிந்து வந்தனர்.  இந்நிலையில், கடந்த 43 நாட்களாக கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நூற்பாலை மூடப்பட்டு, தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 5 பேர் மட்டும் நூற்பாலை வளாகத்தில் இருந்தனர்.  தற்போது கோடை துவங்கி அக்னி வெயில் கொளுத்தி வரும் நிலையில், நேற்று மதியம் 1 மணி அளவில் நூற்பாலையில் பஞ்சு அடுக்கி வைத்த இடத்தில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதையறிந்த காவலாளி  உடனடியாக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். வளாகத்தில் இருந்த பணியாளர்களும் வெளியே வந்துவிட்டனர்.

தகவலறிந்த வெள்ளகோவில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 20 லாரிகளில் தண்ணீர் வரவழைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாததால், காங்கயம், கொடுமுடி, தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்களும் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  அதற்குள் 27 இயந்திரங்கள், ஐந்து ஆயிரம் பண்டல் நூல்,  ஒரு லட்சம் கிலோ பஞ்சு, கட்டடம் மேற்கூரை என ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்–்படுகிறது. காங்கயம் டி.எஸ்.பி தனராசு, சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். தீ விபத்துக்கான காரணம் குறித்து, வெள்ளகோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : whiteloom , White House, Burning ,ashes ,products
× RELATED குரிசிலப்பட்டு அருகே சாராயம் விற்று...