×

கொரோனா அச்சத்தால் மக்காள் பாராட்டுக்கு வராத super swing: கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல்

பெய்ஜிங்: சீனாவில் 2,300 அடி உயரம் உள்ள குன்றின் விளிம்பில் super swing என்ற பிரம்மாண்ட ஊஞ்சலை அமைத்து அசத்தியுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் 2,300 அடி உயரம் உள்ள குன்றின் விளிம்பில் ஒரு பெரிய ஊஞ்சல் உருவாக்கப்பட்டுள்ளது. super swing என்று அழைக்கப்படும் இந்த ஊஞ்சலானது 328 அடி உயர வளைவு மற்றும் 354 அடி ஏவுகணை கோபுரத்தை கொண்டது. கொரோனா வைரசால் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த super swing இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.

இதுவரை 288 அடி 8 அங்குலம் கொண்ட ஊஞ்சலே கின்னஸ் சாதனையாக உள்ள நிலையில் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஊஞ்சலை கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 80 கி.மீ.வேகத்தில் இயங்க கூடிய ஊஞ்சலை கொண்ட இந்த பள்ளத்தாக்கில் நபர் ஒருவர் ஊஞ்சல் ஆடும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Tags : McCall ,Guinness World Records Super-swing , super swing, Guinness record
× RELATED வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க...