×

நாகை மாவட்டத்தில் மக்கள் எதிர்ப்பால் 6 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை: டோக்கன் தந்து 92 கடைகளில் மது விநியோகம்

நாகை: பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாகை மாவட்டத்தில் 6 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. டோக்கன் தரப்பட்டு 92 கடைகளில் மதுபானம் விநியோகிக்கப்பட்டது. கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், பூவைத்தேடி, புத்தர்மங்கலம், கூறைநாடு, ஆணைக்கரைசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர், போலீசார் பொதுமக்களிடம் சமதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமதான பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. இதனால் மாவட்டத்தில் 6 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. அதே போல் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை.

எனவே மாவட்டத்தில் உள்ள 100 கடைகளில் 92 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் முன்பு மது பிரியர்கள் ஆதார் அட்டை ஜெராக்ஸ் எடுத்து கொண்டு வந்து வரிசையில் நின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த எல்லா கடைகளிலும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. அதேபோல வரிசையில் செல்வதற்காக தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.கொள்ளிடம்:நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் தண்டேசநல்லூர், கொப்பியம், புதுப்பட்டினம், விநாயகக்குடி, ஆகிய 4 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று காலை முதலே 1 கி.மீ. தூரத்துக்கு குடிமன்கள் நீண்ட வரிசையில் மாலை வரை எண்ணிக்கை குறையாமல் நின்றுகொண்டேயிருந்தனர். வாட்டி வதைக்கும் வெயிலிலும் நின்றுகொண்டு மகிழ்ச்சியாக மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார் தடியடி
நாகையில் ரயில்வே ஸ்டேசன் எதிரே உள்ள டாஸ்மாக் கடை, செல்லூர் ரவுண்டானா செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்ல முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி சமூக இடைவெளியை பின்பற்ற செய்தனர். மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது.



Tags : shops ,Tasmaq ,stores ,protests ,opposition ,Nagai district 6 ,Token Dhanu 92 ,district ,Naga , 6 Tasmaq, store,Token, Liquor ,distribution
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி