×

கோயம்பேட்டில் இருந்து கோடம்பாக்கத்திற்கு தாவிய கொரோனா: சென்னையில் அதிகம் பாதிக்கப்பட பகுதியில் கோடம்பாக்கம் முதலிடம்...திரு.வி.க.நகர் 2-ம் இடம்

சென்னை: சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 461 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், புதிய மையமாக அப்பகுதி மாறியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியளவில் 4-வது இடத்தில் உள்ள தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக தலைநகர் சென்னை உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 644ஆக உயர்ந்துள்ளது. இதில், அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 461 பேருக்கும், அதற்கு அடுத்த இடத்தில் திரு.வி.க.நகர் மண்டலத்தில் 448 பேருக்கும்,ராயபுரத்தில் 422 பேருக்கும் நோய் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நோய் தொற்றிலிருந்து 358 பேர் இதுவரை குணமாகியுள்ள நிலையில், 23 பேர் மரணமடைந்துள்ளனர். இதுதவிர்த்து, மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதித்தோரில் 62 புள்ளி 78 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர். 37 புள்ளி 18 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். கொரோனாவுக்கு 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கோயம்பேட்டில் இருந்து கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது, கோடம்பாக்கத்தில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் கொரோனாவின் புதிய மையமாக கோடம்பாக்கம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Kodambakkam ,Chennai ,Coimbatore ,area , Korumba from Coimbatore to Kodambakkam: Kodambakkam is the most vulnerable area in Chennai.
× RELATED கோடம்பாக்கத்தில் யூடியூப் நிறுவன ஊழியர் தற்கொலை: போலீசார் விசாரணை