×

பிரான்ஸ் நாட்டில் வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கி கொள்ளப் போவதாக அந்நாட்டு பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவிப்பு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கி கொள்ளப் போவதாக அந்நாட்டு பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளார். சீனாவில் முதன் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி  வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைரசை கட்டுப்படுத்த மார்ச் 17-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 174,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 25,987 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பிரான்சில் வைரசின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று 178 பேர் மரணம் அடைந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் 3000-க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கிக் கொள்ளப் போவதாக அந்நாட்டு பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளார். மேலும் பாரிஸ் நகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்.

கொரோனா பாதிப்பு அடிப்படையில் நாட்டில் சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Edward Philip ,France , France, Curfew, Prime Minister Edward Philip
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...