×

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. செவிலியர்கள் போராட்டம்..: பாதுகாப்பு கவசம் வழங்க கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஏற்கனவே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் நோயாளிகளுக்கு கடும் அவதி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர், இதனால் போராட்டம் திரும்பபெறப்பட்டது.


Tags : Chidambaram Annamalai University , Chidambaram ,Annamalai, University, Nurses ,
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு...