×

மகாராஷ்டிராவில் சரக்கு ரெயிலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: மகாராஷ்டிராவில் சரக்கு ரெயிலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ள கர்மாட் அருகே நேற்று இரவு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தண்டவாளத்தில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலையில் அந்த வழித்தடத்தில் வந்த சரக்கு ரெயில் அவர்கள் மீது  மோதியது. இதில் குழந்தைகள் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சரக்கு ரெயிலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

Tags : Edappadi Palanisamy ,victims ,train accident ,Maharashtra ,tragedy victims , Chief Minister Edappadi Palanisamy's,condolences , family , tragedy victims,Maharashtra
× RELATED அரியலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி