×

பட்டுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..: காவிரி மேலாண்மை வாரியத்தை கலைத்ததற்கு எதிர்ப்பு

பட்டுக்கோட்டை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசின் ஜெல் சக்தி துறையோடு இணைத்ததை கண்டித்து பட்டுக்கோட்டையில் விவசாயிகள் வேளாண் இடு பொருட்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மகாராஜா சமுத்திரம் வெட்டிக்கட்டில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர்.

அவர்கள் கருப்பு பட்டை அணிந்துகொண்டு வேளாண் இடு பொருட்களான ஏர்கலப்பை, மண்வெட்டி மற்றும் மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அமைச்சகத்தின் கீழ் முடக்கக்கூடாது என்றும், தமிழர்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினார். ஊரடங்கை மீறி மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது மத்திய, மாநில அரசுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Tags : Pattukkottai ,protest ,Cauvery Management Board Pattukkottai ,Cauvery Management Board of Protest , Farmers, Pattukkottai, Protest ,Cauvery ,Management, Board
× RELATED வெளியூர் அனுப்ப முடியாததால் சாலையோரம் பழங்கள் விற்கும் விவசாயிகள்