×

ஒரு பிரதமருக்கு பதிலாக, பல வலிமையான முதல்வர்கள் இருந்தால் கொரோனாவை வீழ்த்தலாம்...காணொலி காட்சி மூலம் ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி இருந்து காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, மத்திய அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அப்போது, கொரோனா தடுக்க எடுக்கப்படும்  நடவடிக்கைள் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எடுத்து வருகிறது.

ஆரோக்கியத்திற்கும், பொருளாதார நிலைமைக்குமான போட்டியாக கொரோனா உள்ளது. இது விமர்சிப்பதற்கான நேரமில்லை்; அதே நேரத்தில் பொது முடக்கத்திலிருந்து மீள சரியான உத்தி தேவை. ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்த  தொழிலாளர்களுக்கும் தற்போது உதவிகள் தேவை. ஊரடங்கை தளர்த்துவதற்கு முன் உரிய வழிமுறைகளை வகுக்கவும் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. ஒரு பிரதமருக்கு பதிலாக, பல வலிமையான முதல்வர்கள் இருந்தால் கொரோனாவை வீழ்த்தலாம் என்றும் கூறினார். கொரோனா தடுப்புப் பணியில் மத்திய அரசிடம்  வெளிப்படைத்தன்மை இல்லை, அரசாங்கம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள் தேசிய அளவில் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களை மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாநில மட்டங்களில் தீர்மானிக்கப்பட வேண்டும். தேசிய அளவில் சிவப்பு மண்டலங்களாக  இருக்கும் பகுதிகள் உண்மையில் பசுமை மண்டலங்கள் மற்றும் நேர்மாறாக இருப்பதாக எங்கள் முதல்வர்கள் தெரிவிப்பதாகவும் கூறினார்.


Tags : chiefs ,interview ,Rahul Gandhi , Instead of a prime minister, there are many powerful chiefs who can bring down corona ...
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...