×

அமெரிக்காவைத் தொடர்ந்து கொரோனா சிகிச்சைகாக ரெம்டெசிவிர் மருந்தை அதிகாரப்பூர்வமாக்கியது ஜப்பான்!!!

டோக்கியோ : கொரோனா சிகிச்சைகாக ரெம்டெசிவிர் மருந்தை ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக்கி உள்ளது.  அமெரிக்காவைத் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தை கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக ஜப்பான் விளங்குகிறது.ஜப்பானில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 15,253 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் நோய் தொற்றுக்கு இதுவரை 556 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜப்பானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் இறுதிவரை ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டு பிரதமர் ஷின்சே அபே உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, கொரோனாவுக்கு வேறு எந்த அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையும் இல்லாததால், ரெம்டெசிவிர் மருந்து மீதான ஆர்வம் உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது.அமெரிக்க அரசு மற்றும் கிலீட் சயின்சஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்த மருந்து தான் ரெம்டிசிவிர்,. அதனை எபோலா வைரஸ் தொற்றிற்கு பயன்படுத்தினர். மனித உடலுக்குள் நிகழும் வைரஸ் பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் தன்மை இந்த மருந்திற்கு உள்ளதால், கொரோனா வைரஸுக்கு சிறந்த மருந்தாக அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரெம்டெசிவிர் எனும் மருந்து கொரோனா நோயாளிகளை 31% விரைவாக குணப்படுத்துவதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜப்பானில் கொரோனா சிகிச்சையாக கைலிட் சயின்சஸ் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடுமையான கொரோனா வைரசின் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Tags : Japan ,US ,Corona , USA, Corona, Treatment, Remedicavir, Medicine, Japan
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...