அப்பாவிடம் வழிப்பறி: நடிகை நிலா போலீசில் புகார்

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான பிரியங்கா சோப்ராவின் உறவினர் நிலா. இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் நிலா அன்பே ஆருயிரே, லீ, மருதமலை, கில்லாடி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கொரோனா தேசிய ஊரடங்கு காரணமாக டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார். 2 தினங்களுக்கு முன் நிலாவின் அப்பா, வெளியே வாக்கிங் சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றனர். இது தொடர்பாக போலீசில் நிலா புகார் செய்துள்ளார்.

இது பற்றி நிலா கூறும்போது, “எனது தந்தை போலீஸ் காலனி வழியாக நடந்து சென்றபோது,  திடீரென்று ஒரு பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் போலீஸ் ரோந்து செல்லும் இடத்தில் நடந்த இந்த சம்பவத்துக்கு பிறகும் டெல்லி பாதுகாப்பானது என்று சொல்வீர்களா?” என கேட்டுள்ளார்.

Related Stories: