வீட்டிலே ஐபோனில் திரிஷா நடிக்கும் படம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் அனைத்து மொழி நடிகர், நடிகைகளும் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சில நடிகர், நடிகைகள் மட்டும் தங்களது சமூக வலைத்தளங்களில் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலர், தங்கள் வீட்டுக்குள்ளேயே குறும்படம் உருவாக்கி வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஆண்ட்ரியா நடித்த லாக்டவுன் என்ற குறும்படம் இணையதளத்தில் வெளியானது. இதை கவிஞர் கண்ணதாசன் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் இயக்கி இருந்தார். இதையடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் ஐபோனில் குறும்படம் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் திரிஷா நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் தனது வீட்டில் இருந்துகொண்டு திரிஷாவுக்கு வீடியோகால் வழியாக, எப்படி ஒரு காட்சியைப் படமாக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார். அதன்படி திரிஷா அவரது வீட்டிலே நடிக்கிறார். அதற்காக கையில் ஒரு ஐபோன் வைத்துக்கொண்டு, ‘இது சரியா?’ என்று கேட்கும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திரிஷா. இதையடுத்து அந்தக் காட்சிகளை எடிட்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கவுதம் வாசுதேவ் மேனன், பின்னணி இசையைப் பதிவு செய்து, பிறகு சமூக வலைத்தளத்தில்  வெளியிடுவார் என்று தெரிகிறது. இதன் கதை மற்றும் டைட்டிலை விரைவில் இயக்குனர் அறிவிப்பார் என்று சொன்னார், திரிஷா.

Related Stories:

>