×

போபால் முதல் விசாகப்பட்டினம் வரை

கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் ஏற்பட்ட விஷ வாயு கசிவில் 3,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதுவே உலகின் மிக மோசமான தொழில்துறை பேரழிவாகும். இதன் பின் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட வாயுக்கசிவு விபத்துகள் வருமாறு:
 2014, ஜூன் 12, பிலாய், சட்டீஸ்கர்: செயில் நிறுவனத்தின் பிலாய் ஆலையில் மீத்தேன் வாயு பைப்லைனில் ஏற்பட்ட கசிவில், அந்நிறுவனத்தின் துணை பொது மேலாளர்கள் 2 பேர் உட்பட 6 பேர் பலியாயினர். 50 பேர் பாதிக்கப்பட்டனர்.
2014, ஜூன் 27, நாகரம், ஆந்திரா: காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து வாயு கசிவு மற்றும் தீ விபத்தில் சிக்கி 29 பேர் பலியாயினர். 10 பேர் காயமடைந்தனர்.
2016, நவம்பர் 17, மங்களூரு, கர்நாடகா: மங்களூரு-ஹஸ்சன்-மைசூரு மற்றும் சோலூர் பகுதிகளுக்கு இடையே எச்பிசிஎல் பைப்லைனில் ஏற்பட்ட வாயுக்கசிவால் சுற்றுவட்டார கிராமங்கள்பாதிக்கப்பட்டன. 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
2017, மார்ச் 15, கான்பூர், உபி: கான்பூரில் உள்ள கடியார் குளிர்பதன கிடங்கில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவில் 5 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
2017, மே 6, டெல்லி: தென்கிழக்கு டெல்லியில் உள்ள துக்ளாபாத் பகுதியில் இரு பள்ளிகளுக்கு அருகே உள்ள கன்டெய்னர் கிடங்கில் ரசாயன வாயு கசிந்ததில் 450 மாணவிகள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
2017, ஏப். 13, போர் கிராமம், குஜராத்: குஜராத்தின் போர் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் குளோரின் வாயு சிலிண்டர் வால்வு விழுந்து வாயு கசிந்தது. இதனால் கண் எரிச்சல், தொண்டை வலி ஏற்பட்டு 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
2017, மே 16, பெலூர், கர்நாடகா: பெலூரில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் குளோரின் வாயு கசிந்ததால் 25 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
2018, அக்டோபர் 9, பிலாய், சட்டீஸ்கர்: பிலாய் எஃகு ஆலையில் பராமரிப்பு பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாயினர். 14 பேர் காயமடைந்தனர்.
2018, டிசம்பர் 20, வல்சாத், குஜராத்: வல்சாத் கண்ணாடி தயாரிப்பு ஆலையின் அருகில் உள்ள ரசாயன நிறுவனத்தில் இருந்து குளோரின் வாயு கசிந்ததால், கண்ணாடி ஆலையின் 40 பணியாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Tags : Bhopal ,Visakhapatnam , Bhopal, Visakhapatnam, India
× RELATED திருமணமான 2 மாதத்தில் தர்மசங்கடம்;...