×

விமான துறைக்கு 25,000 கோடி இழப்பு; ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்திய விமான போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொடர்பாக, இக்ரா நிறுவனம் வெளியிட்ட கணிப்பில், ‘இந்திய விமான போக்குவரத்து துறை நாள் ஒன்றுக்கு சுமார் 75 கோடி முதல் 90 கோடி இழப்பை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் இந்த மாத இறுதி வரை இந்த துறைக்கு சுமார் 5,100 கோடி முதல் 6,100 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது.  கிரிசில் வெளியிட்ட கணிப்பில், ‘நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்திய விமான போக்குவரத்து துறைக்கு சுமார் 24,000 கோடி முதல் 25,000 கோடி வரை இழப்பு ஏற்படும். விமான நிறுவனங்களுக்கு அதிகபட்ச இழப்பாக 17,000 கோடி, விமான நிலையத்தை இயக்கும் நிறுவனங்களுக்கு 5,000 முதல் 5,500 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது. 


Tags : Department of Aviation, Indian Aviation Department
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...