பிரெட் லீ, ஸ்டெயின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினேன்...ரோகித் ஷர்மா ஒப்புதல்

மும்பை: சர்வதேச போட்டிகளில் அறிமுகமானபோது பிரெட் லீ, டேல் ஸ்டெயின் ஆகியோரின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினேன் என்று இந்திய அணி தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.  ஒருநாள்  போட்டிகளில் 3 இரட்டை சதங்களை அடித்து அசத்திய சாதனையாளர் ரோகித் சர்மா. இவர் சமூக ஊடகம் ஒன்றில் சக வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான முகமது ஷமியுடன்  உரையாடியபோது யாருடைய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார் என்பதையும், தற்போது பிடித்த பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்தும் கூறியதாவது: 2007ல் இந்தியா, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரில் அறிமுகமானேன்.

அப்போது ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ உலகின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர். ஆரம்பத்தில் அவருடைய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினேன். அதேபோல் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டெயின் பந்துவீச்சை எதிர் கொள்வது  சிரமமாக இருந்தது. ஆனால் அவர்கள் இருவரையும் எனக்கு பிடிக்கும். அவர்கள் பந்துவீசும் பாணியை மிகவும் ரசித்தேன். இப்போது இருக்கும் பந்து வீச்சாளர்களில் தென்னாப்ரிக்காவின் காகிசோ ரபாடா ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் எனக்கு மிகவும் பிடித்தமான பந்துவீச்சாளர்கள். அவர்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் பந்து வீசுகிறார்கள். இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

Related Stories: