×

போடுறா.... டோங்காவுக்கு 2 டிக்கெட்டு கொரோனாவே இல்லையாம் புரோ...

வாஷிங்டன்: கொரோனா தொற்று இல்லாத நாடுகள் சில இருப்பதாக அமெரிக்க பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொலைகார கொரோனா வைரஸ் உலகளவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆனால், இன்னமும் கூட சில நாடுகள் கொரோனாவில் இருந்து தப்பி பிழைத்து இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 32 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

10 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய்தொற்றுக்கு சிகிச்சை ெபற்றதை தொடர்ந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சில நாடுகளில் இப்போது வரை கொரோனா தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. கிரிபாடி, லெசோதோ, மார்ஷல் தீவு, மிக்ரோனேஷியா, நவுரு, வடகொரியா, பலு, சமோவா, சாலமன் தீவுகள், டோங்கா, துர்க்மெனிஷ்தான், துவாலு, வனாட்டு போன்ற நாடுகளில் கொரோனா தொற்று இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tonga , Tonga, 2 tickets, Corona, American University
× RELATED நீதிமன்றத்தின் மீது திமுகவுக்கு...