×

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் திருப்போரூருக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள் கூட்டம்

சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டதால், கேளம்பாக்கம், படூர், நாவலூர், மாம்பாக்கம் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. திருப்போரூர் நகர பகுதி மற்றும் வெங்களேரி, கொட்டமேடு, வெங்கூர், வட நெம்மேலி, கோவளம் ஆகிய கிராமங்களில் உள்ள 11 கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. இதனால், நேற்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பைக், கார்களில் ஆயிரக்கணக்கானோர் திருப்போரூருக்கு படை எடுத்தனர்.

குடிமகன்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முதலில் டோக்கன் கொடுத்து வரிசையில் நிற்க வைத்த போலீசார், கூட்டம் அதிகரித்ததால் வேறு வழியின்றி டோக்கனை நிறுத்தி வரிசையில் அனுப்பினர். சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் இடையே நாவலூரில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, ஊரடங்கு காலத்தில் அனுமதி சீட்டு இருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டதால், இந்த சோதனைச்சாவடியில் போலீசார் இல்லை. இதனால் மது வாங்குவதற்காக படை எடுத்தவர்களை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மது வாங்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் நேற்று   திருப்போரூரில் குவிந்ததால் நோய் தொற்று பரவுமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.



Tags : Citizens , Task Shops, Tiruppore, Chennai, Citizens Meeting
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...