×

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்

சென்னை: விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  ‘விசாகப்பட்டினர் ஆலையில் விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என முதல்வர் விடுத்த இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமக தலைவர் சரத்குமார், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Tags : death ,Victims , Visakhapatnam, poison gas, casualties, CM condolences
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்