×

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை மூடக்கோரி முற்றுகையிட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி கிராமத்தில் மதுபானக்கடை நேற்று காலை திறக்கப்பட்டது. பல்வேறு கிராமங்களை சார்ந்த மக்கள் இப்பகுதிக்கு மதுபாட்டில்கள் வாங்க வந்ததால் வைரஸ் தொற்று தங்கள் கிராம மக்களை பாதிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக கடையை திறக்க கூடாது என பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  ஆனால் இந்த இடத்தில் போராட அனுமதி கிடையாது என காவலர்கள் தடுத்ததால் பொதுமக்கள் காவலர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து காவலர்கள் பொதுமக்கள் மீது சிறிதளவு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தகவல்அறிந்து  ஊராட்சி மன்ற  தலைவர் ஆனந்தராஜ் வந்தார்.

உடனே  போராட்டத்துக்கு  நீங்கள்தான் காரணம் எனக் கூறி  போலீசார் அவரை கைது செய்தனர். அதன்பிறகு  மக்கள் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள் ஊராட்சி மன்ற தலைவரை விடுவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  அதே போல புதுவாயில் தச்சூர் கூட்டு சாலை, தேர்வாய்கண்டிகை, உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



Tags : civilians ,pub ,Kummidipoondi Gummidipoondi , Gummidipoondi, bartenders, civilians, policemen
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...