×

நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சியில், துப்புரவு மேற்பார்வையாளராக வேலை பார்ப்பவர் ஷேக். கடந்த 30ம் தேதி பணி காலம் முடிந்து ஓய்வு பெற்றார். முன்னதாக ஷேக், பணி பதிவேட்டில், வயதை கூட்டி திருத்தம் செய்துள்ளார். இதனை ஆணையர் மகேஸ்வரி, ஆய்வு செய்தார். அதில், ஷேக், தனது பிறந்த தேதியை பணி பதிவேட்டில் திருத்தியது தெரிந்தது. இதையடுத்து, உரிய நாளில் பணி ஓய்வு பெற, அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷேக், நகராட்சி அலுவலகத்தில் இருந்த ஆணையர் மகேஸ்வரிக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆணையர் மகேஸ்வரி, சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.Tags : commissioner , Municipal commissioner, murder threat
× RELATED சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மாநகராட்சி ஆணையர்