×

சிறப்பு ரயில் இயக்கப்படும் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்; சோனியா காந்திக்கு இந்திய ரயில்வே ஊழியர்கள் சம்மேளனம் கடிதம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு இயக்கப்படும் விவகாரத்தில் அற்ப அரசியலில் ஈடுபடக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இந்திய ரயில்வே ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். பிழைப்புக்காக வேறு மாநிலம் சென்ற தொழிலாளர்கள் பொது முடக்கத்தால் வருமானம் இழந்து உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. ஆனால், அவர்களை இலவசமாகப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்காமல், வழக்கமான கட்டணத்தை விடக் கூடுதலாக 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்குக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே ஏழை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவரது சொந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி ஏற்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தி கடந்த 4 ஆம் தேதி அறிவித்தார். இதனையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 85 சதவீத பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் ஏற்கும். மீதமுள்ள 15 சதவீதக் கட்டணத்தை மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்திய ரயில்வே ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ‘கொரோனா தொற்று காலத்தில் பயணம் செய்வது என்பது ஆபத்தான ஒன்று. ஆனால், ரயில்வே ஊழியர்கள் அவர்களுடைய கடினமான உழைப்பின் மூலம் அதனை சாத்தியப்படுத்தியுள்ளனர். அற்ப அரசியல்லாபங்களுக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களின் மூலம் வீடு திரும்புவதை குலைத்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ரயில்வே நிலையங்களில் அளவுக்கதிகமான கூட்டம் கூடுவது கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sonia Gandhi ,Indian Railway Employees Federation , Special train, Politics, Sonia Gandhi, Indian Railway Employees Federation
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...