×

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 43 நாளுக்கு பிறகு திறந்த முதல் நாளிலேயே சோகம்; கணவர் குடித்துவிட்டு வந்ததால் தகராறு: மனைவி, மகள் தீக்குளிப்பு

மதுரை: அலங்காநல்லூரில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி மற்றும் மகள் இருவரும் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 43 நாட்களாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் குடும்ப தகராறு ஓரளவு குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த சிவக்குமார் என்ற கட்டிட தொழிலாளி இன்று மதுக்கடை திறந்தவுடனே மதுவை வாங்கி அருந்திவிட்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி பரமேஸ்வரி; இத்தனை நாள் மது குடிக்காமல் இருந்துவிட்டு இன்று மது அருந்தி வந்ததால் இருவருடன் குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனை அவரது மகள் அர்ச்சனா(18) இவரும் தனது தந்தையை கண்டித்துள்ளார். இந்நிலையில் சிவக்குமார் இருவரையும் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பரமேஸ்வரி முதலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி வீட்டில் அமர வைத்தனர். இந்நிலையில் அர்ச்சனா திடீரென வீட்டிற்குள் சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதனை காப்பாற்ற சென்ற பரமேஸ்வரி உடலிலும் தீப்பற்றியது. இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிவக்குமார் குடிபோதையிலேயே அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுக்கடைகள் இவ்வளவு நாள் மூடப்பட்டு இன்று திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Dispute ,task force shops ,Tamil Nadu ,Task Shop , Tamil, Task Shop, Dispute, Wife, Daughter, Flames
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...