×

கொரோனா சிகிச்சைக்கு கங்கை நதியின் நீரை பயன்படுத்தலாமா? : மத்திய அரசின் பரிந்துரை மீதான முடிவை தள்ளிவைத்தது ICMR

டெல்லி : கங்கை நதியின் நீரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரை மீது முடிவெடுப்பதை, ஐசிஎம்ஆர் தள்ளி வைத்துள்ளது.கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டிபிடித்ததாக தெரியவில்லை. உலக அளவில் மக்கள் கொத்து கொத்தாக மடியும் அவலமாக உள்ளது எல்லா நாடுகளும் கையை பிசைந்து நிற்கின்றன. இந்த நிலையில் கொரோனாவுக்கு ஒவ்வொருவரும் ஒரு வழிமுறையை கூறி வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், கங்கை நதி நீரில் ஆபத்தான வைரசுகளை அழிக்கக்கூடிய பாக்டீரியோஃபேஜ் என்ற வைரஸ் உள்ளதாகவும், எனவே கொரோனா சிகிச்சைக்கு கங்கை நீரை பயன்படுத்தலாம் என்றும் அதுல்யகங்கா என்ற அமைப்பு மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.இது குறித்து ஆய்வு செய்த நீர்வள அமைச்சகத்தின் துறைகளான நேஷனல் மிஷன் ஃபார் கிளீன் கங்கா, நமாமி கங்கா திட்ட இயக்குதரகம் ஆகியன இது குறித்து முடிவு எடுக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை கேட்டுக் கொண்டன. பிளாஸ்மா தெரபியை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆய்வுகளில் மூழ்கி உள்ளதால், இது பற்றி இப்போது முடிவெடுக்க இயலாது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்து விட்டதாகவும கூறப்படுகிறது. 


Tags : Ganges River ,ICMR ,government ,Central , Corona, Treatment, River Ganga, Water, Federal Government, Recommendation, ICMR
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...