×

அக்னியின் அனலை குறைக்க பனை நுங்கு சீசன் துவக்கம்: ரூ.20க்கு 3 முதல் 4 நுங்கு விற்பனை

மதுரை:  அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தை குறைத்திடும் வகையில் தற்போது பனை நுங்கு சீசன் துவங்கியது. ரூ.20க்கு குறைந்தது 3 முதல் 4 நுங்கு விற்பனை ெசய்யப்படுகிறது.  கொரோனா தொற்று பரவலால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளது. கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் என்றால், சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் ேததி துவங்கியது. வரும் 28ம் தேதி வரை தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரிக்கும்.  இந்நிலையில் கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைத்திட இயற்கை வழங்கிய அற்புத ெகாடையான பனை நுங்கு சீசன் துவங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தின் மேலூர் தாலுகா, கிழக்கு தாலுகா, அலங்காநல்லூர், வாடிப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பனை விவசாயம் நடக்கிறது. ஓராண்டுக்கான பனையின் வளர்ச்சியில் 3 மாதங்களுக்கு மட்டுமே நுங்கு விளைகிறது. பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதத்தில் மட்டுமே விளைச்சல் தரக்கூடிய நுங்கு கொடூரமான ெகாரோனா காலத்தில் மக்களை தேடி வந்துள்ளது.

கொரோனா காரணமாக நகருக்குள் பெரும்பாலான பகுதியில் கிடைக்காவிட்டாலும், நகரை ஒட்டிய பகுதிகளான சர்வேயர்காலனி, புதூர், உத்தங்குடி, ஒத்தக்கடை, கருப்பாயூரணி, பீ.பீ.குளம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை களை கட்டியுள்ளது. ரூ.20க்கு குறைந்தது 3 முதல் 4 நுங்கு வரை விற்பனை ெசய்யப்படுகிறது. எந்த வித ரசாயனம் மற்றும் உரங்களின்றி இயற்கை முறையில் வளரும் பனை மரத்தின் அற்புத கொடையாக பார்க்கப்படும் நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய நுங்கு, கோடையின் தாக்கத்தில் இருந்து மனிதனை பாதுகாக்கிறது. மதுரை மட்டுமல்லாது ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகளவில் நுங்கு விற்பனை இருக்கிறது. நகர், புறநகரின் முக்கிய சாலைகளில் நுங்கு விற்பனை களை கட்டியுள்ளது.

மதுரை அருகே கள்ளந்திரியைச் சேர்ந்த ராஜா கூறும்போது, ‘‘ஒரு பனை மரம் ரூ.500 என விலை நிர்ணயம் ெசய்யப்பட்டு குத்தகைக்கு எடுக்கிறோம். ஓராண்டுக்கு எங்களது பராமரிப்பில் மரம் இருக்கும். தற்போது ஒரு மரத்திற்கு சராசரியாக ரூ.700 முதல் ரூ.800 பெருமானமுள்ள விளைச்சல் இருக்கும். எல்லா செலவுகளும் போக ஒரு மரத்திற்கு ரூ.150 முதல் ரூ.200 வரை லாபம் கிடைக்கும். பருவமழை நன்றாக பெய்தால், பனை விளைச்சல் அதிகமிருக்கும். கடந்த சில ஆண்டுகளாக போதுமான அளவுக்கு விளைச்சல் இல்லை. இந்தாண்டு ஓரளவுக்கு தான் மழை பெய்துள்ளது. இதனால், இந்தாண்டுக்கான சீசன் தாமதமாக வந்துள்ளது. அதுவும் கொரோனாவால், வெளி இடங்களுக்கு சென்று விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இருந்தாலும், எந்தவித கலப்பும் இல்லாத இயற்கையான நுங்கு உடலுக்கு நல்லது. இன்னும் ஓரிரு மாதத்திற்கு நுங்கு விளைச்சல் இருக்கும்’’ என்றார்.
.

Tags : Palm foam season ,Agni , Palm ,reduce ,Agni,analogy,
× RELATED பொதுமக்கள் பாராட்டு கறம்பக்குடி...